நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியான சர்கார் படத்தை சில மணி நேரத்திலேயே லீக் செய்தது தமிழ் ராக்கர்ஸ். இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப்படம் உலக முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இதற்கிடையில் நேற்று ‘சர்கார்’படத்தின் எச்.டி. பிரிண்ட்டை வெளியிடப்போவதாகத் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவித்தது.
இந்த பதிவையடுத்து, சர்கார் படம் இணையத்தில் வெளியாகாமல் இருக்க படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நீதிமன்றத்தை நாடியது. அதன் விசாரணையில் சர்கார் படம் இணையத்தில் வெளியிட தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், தயாரிப்பாளர் சங்கம் மூலமாகவும் அதிரடியாக சிறப்பு கண்காணிப்பு ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தது படக்குழு. இவர்கள் மட்டுமின்றி விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் சமூகவலைத்தளத்தில் இப்படத்தை லீக் செய்ய வேண்டாம் ப்ளீஸ் என்று கெஞ்சியும் கேட்டிருந்தனர்.
இந்நிலையில் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படத்தை வெளியிட்டிருக்கின்றனர். ஆனால், லிங்க் மட்டும் ஓபன் ஆகவில்லை. 500 இன்டர்னல் சர்வர் எர்ரர் (500 Internal Server Error) என்று வருகிறது.
எனினும், இன்று மாலைக்குள் அதில். சர்கார் படத்தை அப்லோடு செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கு தயாரிப்பாளர் சங்கம் என்னதான் நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.