படேல் சிலை பெயர் பலகையில் தமிழ் மொழிபெயர்ப்பில் பிழை – தமிழ் புறக்கணிக்கப்படுவதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு 

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் படேல் சிலையின்கீழ், தமிழ் மொழியில் அச்சிடப்பட்டுள்ள வாசகம் பிழையாக இருப்பது, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்ட முறையில் கட்டப்பட்டுள்ளது. 182 உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை, உலகின் மிகப்பெரிய சிலை என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

ஒற்றுமையின் சின்னமாக அடையாளப்படுத்தப்படும் இந்த சிலையின் கீழ் இந்தி, ஆங்கிலம், தமிழ் என பல்வேறு மொழிகளில் ஒற்றுமையின் வலிமை என்ற பொருள்படும் வாசகம் பதிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட வாகசத்தில் ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என பிழையாக அச்சிடப்பட்டுள்ளது. இது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version