முழுக்கொள்ளளவை எட்டும் சர்தார் சரோவார் அணை

சர்தார் சரோவர் அணை முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரதமர் மோடி பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நர்மதை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை உலகின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 138 புள்ளி 68 மீட்டர் உயரம் கொண்ட சரோவார் அணை, கடந்த 2017 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு போதிய பருவமழை இல்லாத காரணத்தினால் அணை முழுவதும் நிரம்பவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டு நர்மதை நதி ஓடும் மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேச மாநிலங்களில் அதிகளவு மழைப்பொழிவு காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மத்திய பிரதேச அணைகளிலிருந்தும் உபரிநீர் திறந்துவிடப்படுவதால் அணை வேகமாக நிரம்பி வருகிறது.

நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138 மீட்டரைத் தொட்டது. இந்நிலையில் சர்தார் சரோவர் அணை இன்று அதன் முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பிரதமர் மோடி, அணையைப் பார்வையிட வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version