சரவணபவன் அதிபர் ராஜகோபாலின் கோரிக்கை மனு தள்ளுபடி

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் அதிபர் ராஜகோபாலின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் உடனடியாக சரணடைய உத்தரவு பிறப்பித்துள்ளது.

சரவணபவன் உணவக அதிபர் ராஜகோபால் ஜீவஜோதி என்ற பெண்ணின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படையை ஏவி கொலை செய்தார். இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு பூந்தமல்லி நீதிமன்றம் கடந்த 2004 ஆம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. ஜூலை 7 ஆம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தனக்கு உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், அதனால் சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்றும் ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா, வழக்கு விசாரணையின் போது நன்றாக உடல்நலம் இருந்தவர், சிறைச்சாலைக்கு செல்வதற்குள் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதா எனக் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, மேல்முறையிட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி உடனே சரணடையவும் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version