தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரசாரம் மேற்கொண்டார்.
திருவான்மியூர், கண்ணகி நகர், பள்ளிகரணை, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் மேற்கொண்டார். இதில் ஏராளமான கூட்டணி கட்சி தொண்டர்களும் , நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சரத்குமார் அம்மா இல்லாத இந்த இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், மத்தியில் நல்லாட்சி மலர அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து அதிமுக மெகா கூட்டணியை அமைத்ததுள்ளதாக கூறினார்.