காசோலை மோசடி வழக்கில் சமக தலைவர் சரத்குமாரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்துள்ள சிறப்பு நீதிமன்றம், ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு, நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் தாங்கள் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் மூலம் ராடன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 2 கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்தனர். அதற்காக அளிக்கப்பட்ட ஏழு காசோலைகள் பணம் இல்லை என திரும்பி வந்துவிட்டதால், சரத்குமார் மற்றும் ராதிகா மீது செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு பின்னர் எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், சரத்குமார், ராதிகா சரத்குமார், ஸ்டீபன் ஆகிய மூவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.