விவசாய மக்களுக்கு தேவையான திட்டம் அத்திக்கடவு : சரத் குமார்

தமிழக பட்ஜெட்டில் அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல ஆண்டுகளாக கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு  விவசாய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு இத்திட்டம் தேவையான திட்டம் என்றும், ராமநாதபுரத்தில் உள்ள அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிக்கு முன்னாள் குடியரசு தலைவர்  அப்துல் கலாம் பெயரில் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறினார்.

Exit mobile version