மக்களுக்காக செயல்படும் ஒரே கட்சி அதிமுக தான்: சரத்குமார்

மக்களுக்காக செயல்படும் ஒரே கட்சி அதிமுக தான் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டமன்ற வேட்பாளர் எஸ்.ஆர். ராஜேஷ் மற்றும் வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜ் ஆகியோரை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை காப்பதற்கு அமைக்கப்பட்டது தான் அதிமுக கூட்டணி என்றும், சதி வேலைகள் செய்ய அமைக்கப்பட்டது தான் திமுக, காங்கிரஸ் கூட்டணி என்று சாடினார்.

திமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் அவர்களிடத்தில், எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லை என்றும் சரத்குமார் குற்றம்சாட்டினார்.

Exit mobile version