சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி குணால் கோஷுக்கு பொருளாதார அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது…
மேற்கு வங்க மாநிலம்,கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும், சாரதா நிதி நிறுவனத்தில், பொதுமக்கள் பணத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது.இந்த வழக்கின் சிபிஐ விசாரணையில், திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி குணால் கோஷ் கைது செய்யப்பட்டார். இரண்டாண்டுகளுக்கு பிறகு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அவரை கட்சியிலிருந்து நீக்கினார். பின் ஜாமீனில் வெளிவந்த இவர், தொடர்ந்து இந்த வழக்கை எதிர்கொண்டு வந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக நேரில் ஆஜராகி, வாக்குமூலம் அளிக்கவேண்டும் என பொருளாதார அமலாக்கத்துறை குணால் கோஷுக்கு தற்போது சம்மன் அனுப்பியுள்ளது.