கைதுக்கான தடையை நீட்டிக்க உச்ச நீதிமன்ற செயலாளரை அணுகுங்கள்: ராஜீவ் குமாருக்கு அறிவுறுத்தல்

கைது செய்வதற்கான இடைக்கால தடையை நீடிக்க கோரிய விவகாரத்தில் உச்ச நீதிமன்ற செயலாளரை அணுகுமாறு கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சாரதா சிட்பண்ட் நிறுவன முறைகேடு வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற ஆதாரங்களை மாற்றியமைத்ததாக கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் ராஜீவ் குமாரிடம் விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா காவல்துறையினர் சிறைபிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே ராஜீவ் குமாரை கைது செய்வதற்கான தடையை மேலும் 7 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டதுடன் தகுந்த நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறவும் கடந்த 17 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்தநிலையில் கொல்கத்தாவில் வழக்கறிஞர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் தன்னை சிபிஐ கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த 7 நாட்கள் தடையை மேலும் நீட்டிக்க வேண்டும் என ராஜீவ் குமார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சிவ் கன்னா அமர்வு, இதுகுறித்து விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்க கோரி உச்சநீதிமன்ற செயலாளரை அணுகுமாறு அறிவுறுத்தினர்.

Exit mobile version