திருச்சி மாவட்டம் லால்குடியில் பிரசித்தி பெற்ற சப்தரிஷீஸ்வரர் கோயிலின் பங்குனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தவத்துறையில் அமைந்துள்ள சப்தரிஷீஸ்வரர் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், ஒன்பதாம் நாள் நிகழ்வாக தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பழமையான இந்த தேர் 75 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2011ல் புதுப்பிக்கப்பட்டு, தேரோட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தேரோட்டத்திற்கான தேர்கால் நடும் விழா கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இதையொட்டி தினசரி வீதியுலாக்கள் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.