சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் "தில்லுக்கு துட்டு 2"

சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் தில்லுக்கு துட்டு படத்தின் 2-ம் பாகத்தின் டீசர் வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில், சந்தானம் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் தில்லுக்கு துட்டு. சந்தானம் கதாநாயகனாக அறிமுகமாகி அதிக வசூலை ஈட்டிய படம் என கருதப்படும் .இந்த படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் இப்படத்தின் டீசர் வரும்29ஆம் தேதி வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சந்தானம் நடிப்பில், சர்வர் சுந்தரம் திரைப்படம் வெளியீட்டுக்காக பல நாட்களாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version