இஸ்ரேலில் துவங்கியுள்ள சர்வதேச மணற்சிற்பக் கண்காட்சியில், 10 நாடுகளைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
தெற்க்கு இஸ்ரேலின் ஆஷ்கெலானில், 2 ஆயிரம் டன் மணலைக் கொண்டு, கலைஞர்கள், கல்லிவர், சிண்ட்ரெல்லா, ஸ்னோ ஒயிட், ஃபுரோசன் கதாப்பாத்திரங்களை வடிவமைத்துள்ளனர். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு ரசித்து வருகின்றனர். முன்னதாக, இத்திருவிழா தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற ராக்கெட் தாக்குதலை, ஏவுகணை தடுப்பு அமைப்பின் உதவியுடன் தடுத்து விட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேலில் உள்ள பரபரப்பான சூழலுக்கு மத்தியிலும், சிலர் குடும்பத்தோடு மணல் சிற்பங்களை ரசிக்க வருகை தந்த வண்ணம் உள்ளனர்.