கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடல் பாகங்கள், மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, ஜாபர்கான்பேட்டையில் வசித்து வந்த பாலகிருஷ்ணன், மனைவி சந்தியா மீதான சந்தேகத்தால், கடந்த மாதம் 20 ஆம் தேதி அன்று அவரைக் கொடூரமாக கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி, பல்வேறு இடங்களில் வீசியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, பாலகிருஷ்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், பள்ளிக்கரணை அருகே உள்ள குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட சந்தியாவின் இரண்டு கால்கள், கை ஆகியவை மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இடுப்பு பகுதியும் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சந்தியாவின் தாயரிடம் இருந்து ரத்த மாதிரிகள் பெறப்பட்டு மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனை மூலம் இறந்தது சந்தியாதான் என்பதை நிரூபிக்கவும், மரபணு சோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் சந்தியாவின் தலையை தேடும் பணி 6-வது நாளாக நடைபெற்றது.