சந்தியாவின் கொலை வழக்கில் அவரின் பெற்றோரிடம் பள்ளிக்கரணை தனிப்படை போலீசார் கன்னியாகுமரியில் விசாரணை மேற்கொண்டனர்.
சந்தியாவின் இரண்டு கால்கள் மற்றும் வலது கை பள்ளிக்கரணை குப்பைக்கிடங்கில் கண்டெடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சந்தியாவில் தலை, இடது கை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்கள் கிடைக்காத நிலையில், சந்தியாவின் தாய் பிரசன்னகுமாரி, சந்தியாவை கொலை செய்த கணவன் பாலகிருஷ்ணன் உடலை விற்றிருக்க கூடும் என புகார் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட தனிப்படை போலீசார் சந்தியாவின் தாய் பிரசன்ன குமாரி, தந்தை ராமகிருஷ்ணன், தங்கை சஜிதா மற்றும் உறவினர்களிடம் கன்னியாகுமரியில் விசாரணை மேற்கொண்டனர். பிறகு சந்தியா, பாலகிருஷ்ணன் தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் மாயவர்தன், யோகமித்ரா ஆகிய இருவரிடமும் விசாரணை செய்ய உள்ளனர் .