தேர்தலில் வாக்கு செலுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, கன்னியாகுமரியை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் ஒருவர், திருச்சி காவிரி ஆற்றில் மணல் சிற்பம் வரைந்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில்100% வாக்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மாவட்டம் தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே திருச்சி காவிரி ஆற்றில் கன்னியாகுமரியை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சசிவர்மா என்பவர், தேர்தலில்100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பாராளுமன்றம் வடிவில் மணல் சிற்பத்தை அமைத்தார். அதில் எனது ஓட்டு எனது உரிமை என்றும் 100% வாக்களிப்போம் என்பதையும் எழுதி நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த விழிப்புணர்வு மணல் சிற்பத்தினை ஏராளமானோர் பார்வையிட்டனர்.