சொட்டு நீர் பாசனம் மூலம் சம்பங்கி சாகுபடி செய்து விவசாயம் மேற்கொள்வதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள மருவாய் கிராமத்தில் சம்பங்கி பூவை விவசாயிகள் அதிகளவில் செய்து வருகின்றனர். தமிழக அரசின் சொட்டு நீர் பாசனம் மூலம் சம்பங்கி விவசாயம் செய்வதாகவும், இதனால் தண்ணீர் பற்றாக்குறை இல்லை எனவும், தமிழக தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் வழிகாட்டு முறைகளில் விவசாயம் செய்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மூன்று ஆண்டுகள் முற்றிய சம்பங்கி கிழங்குகளை நடவு செய்தால், எட்டு ஆண்டுகள் முதல் பண்ணிரெண்டு ஆண்டுகள் மகசூல் செய்யலாம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போது சம்பங்கி ஒரு கிலோ விலை 100 ரூபாய்க்கு விற்பனையாவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.