ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சாம்பார் ஏரியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது…
இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரியான சாம்பார் ஏரியில் ஆண்டு தோறும் குளிர்காலங்களில் 10 முதல் 20 வகையான அழகிய வெளிநாட்டு பறவைகள் இடம் பெயர்ந்து வருகின்றன. இந்நிலையில் சாம்பார் ஏரியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த அதிகாரிகள் பறவைகளின் உடல்களை கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இது குறித்து பேசிய அதிகாரிகள், ‘நீரின் மாசுத்தன்மை காரணமாக பறவைகள் இறந்திருக்கக் கூடும் என்றும், ஆயிரத்து 500 பறவைகள் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.