கஜா புயல் தாக்கத்தால், தஞ்சாவூரில் சம்பா மகசூல் பாதியாக குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். காவிரியில் இருந்து போதிய தண்ணீர் வராததால், கடந்த 7 ஆண்டுகளாக டெல்டா மாவட்ட விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு போதிய மழையால் காவிரியில் தண்ணீர் வந்ததால் சம்பா சாகுபடியில் விவசாயிகள் இறங்கினர்.
இந்த நிலையில், கடந்த மாதம் 16ஆம் தேதி, கஜா புயலால், டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஏராளமான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதனால் சம்பா மகசூல் பாதியாக குறைந்துள்ளது.
முன்பு, ஏக்கருக்கு 30ல் இருந்து 35 மூட்டை நெல் கிடைக்கும். தற்போது ஏக்கருக்கு 15 அல்லது 16 மூட்டை நெல் மட்டுமே கிடைப்பதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். நிவாரணத் தொகையை முழுமையாக வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.