தோழிகளாய் திருப்பதிக்கு நடந்தே சென்ற சமந்தா,ரம்யா…வைரலாகும் போட்டோ..

நடிகை சமந்தா தமிழில் 2010 ஆம் ஆண்டு மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்பு தொடர்ந்து விண்னைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயுடன் கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து பாராட்டை பெற்றார்.

தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறி தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர்.இவருக்கு தெலுங்கிலும் ரசிகர் கூட்டம் அதிகம் என்று சொன்னால் மிகையாகாது.இவர் அடிக்கடி திருப்பதி செல்வது வழக்கம்.இந்நிலையில் விஜே ரம்யாவும், சமந்தாவும் திருப்பதிக்கு நடந்தே சென்றுள்ளனர்.

இதனை ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்’எனது தோழியுடன் திருப்பதிக்கு நடந்து சென்று திருப்பதியில் சிறப்பான தரிசனம் கிடைத்தது என கூறி இவர்களின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும்,விஜே ரம்யா தளபதி 64 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version