திருப்பதியில் ரத சப்தமி பிரம்மோற்சவம்.. சூரிய நாராயணர் அவதாரத்தில் காட்சிதந்த மலையப்பர்!

திருமலை திருப்பதியில் மார்கழி மாத உற்சவம், வைகுண்ட ஏகாதசி மற்றும் புரட்டாசி மாத வழிபாடுகளை தொடர்ந்து ரதசப்தமி பிரம்மோற்சவமும் வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி திருப்பதியில் இன்று அதிகாலையில் சூரிய பிரபை வாகனத்துடன் வாகனச்சேவை தொடங்கியது. சூரிய நாராயணர் அவதாரத்தில் எழுந்தருளிய மலையப்பர், குதிரைகள் பூட்டிய வாகனத்தில் செந்நிற மாலைகளை அணிந்தபடி மாடவீதிகளில் ஊர்வலமாக சென்றார். இதனை தொடர்ந்து சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம் உள்ளிட்டவற்றில் மலையப்பர் வலம் வந்தார். இந்த வாகன சேவையில் திருமலை ஜீயர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ரதசப்தமி பிரம்மோற்சவத்தை காண்பதற்காக பல்லாயிரகணக்கான பக்தர்கள் மாட வீதியில் உள்ள பார்வையாளர் மாடங்களில் காத்திருந்தனர்.

Exit mobile version