முதல்ல சமந்தா..இப்போ சாயிஷா ..அடுத்து ?

நடிகை சமந்தா தனது கணவருடன் ஸ்பெயின் சென்றுள்ள நிலையில், நடிகை சாயிஷாவும் ஸ்பெயின் சென்றுள்ளார்.

நடிகை சாயிஷாவுக்கும் ஆர்யாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.திருமணமாகிய பின் சாயிஷாவின் எந்த ஒரு படமும் ரிலீஸாகவில்லை.தற்போது சூர்யாவுடன் இணைந்து காப்பான் திரைப்படத்தில் சாயிஷா நடித்துள்ளார்.அந்த படமானது செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.அதில் ஆர்யாவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சமந்தா தான் ஸ்பெயின் சென்றுள்ளதாக சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டதை தொடர்ந்து நடிகை சாயிஷாவும் தனது கணவர் ஆர்யாவுடன் ஸ்பெயின் சென்றுள்ளார்.அதில் கடற்கரையில் இருப்பது போல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.’இசை கடலைச் சந்திக்கும் இடத்தில் நீங்கள் என்னை காணலாம்’ என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version