அதிமுக கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு

அதிமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார், அதிமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார். தனது ஆதரவு கடிதத்தை முதலமைச்சர் பழனிசாமியிடம் சரத்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை மற்றும் இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளதாக கூறினார்.

Exit mobile version