திண்டுக்கல் சிறுமி வழக்கில் நீதி வேண்டும் – தமிழகம் முழுவதும் இன்று சலூன் கடைகள் அடைப்பு!

திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, வாயில் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்ட 12 வயது சிறுமியின் வழக்கில், உரிய நீதி வழங்கக் கோரி, தமிழகம் முழுவதும் இன்று சலூன் கடைகள் முழு அடைப்பு போரட்டம் நடத்திவருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரன் உள்ளிட்ட சிலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, சிறுமியின் மூக்கிலும் வாயிலும் மின்சார வயர்களை பொருத்தி கொடூரமான முறையில் கொலை செய்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வடமதுரை காவல் துறையினர், கிருபாகரனை கைது செய்தனர். இந்நிலையில், வழக்கை விசாரித்த திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம், குற்றம் சரியாக நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, கிருபாகரனை விடுதலை செய்தது. இதனையடுத்து, சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு, தமிழகம் முழுவதும் உள்ள முடிதிருத்தும் உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களின் சார்பாக, கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

Exit mobile version