எந்த கட்சிக்கு ஆதாரவாகவும் பிரசாரம் செய்யப்போவதில்லை : சல்மான் கான்

தேர்தலில் தங்களை ஆதரித்து பிரசாரம் செய்யுமாறு, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வந்த நிலையில், அதற்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் மறுப்பு தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியைச் சேர்ந்தவர் சல்மான் கான். இவரது தந்தை காவல்துறையில் பணியாற்றியவர். அந்த தொகுதியில் தொடர்ந்து பா.ஜ.க. வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த முறை நடிகர் சல்மான்கான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளதாகவும், இதுதொடர்பாக சல்மான்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தநிலையில், இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளிவைக்கும் விதமாக, தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் எந்த கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்யபோவதில்லை என்றும் சல்மான் கான் டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

Exit mobile version