வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டையில், பூக்கள் மலிவான விலையில் கிடைப்பதால், பூமாலை விற்பனை அதிகரித்து, வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு, வறட்சி மாதங்களிலும் அதிகளவில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு, தடையின்றி பூக்கள் கிடைத்து வருவதாக, காமராஜர் பூ மார்க்கெட் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், பூக்கள் மலிவான விலைக்கு கிடைப்பதுடன், 30 முதல் 50 ரூபாய்க்கு கட்டப்படும் மாலை, 60 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர். பூ மாலைகள் குறைந்த விலையில் கிடைப்பதால், பொதுமக்களும் அதிகளவில் வாங்கிச் செல்வதாகவும், அதனால், லாபமும் அதிகமாக கிடைப்பதாகவும் பூமாலை வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.