சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

சேலம் நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, கட்சிகளும் அதன் வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில், தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் துவங்கி விட்டன. அந்த வகையில், சேலம் நெய்காரப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில், சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, அதிமுக வேட்பாளர் சரவணனை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version