730 காளைகள்,400 காளையர்கள் கலந்துகொண்ட சேலம் ஆத்தூர் ஜல்லிக்கட்டு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி விமர்சையாக நடைபெற்றது.

ஆத்தூர் அருகே உள்ள நாகியம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாவட்ட ஆட்சியர் ரோகினி தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். கள்ளகுறிச்சி எம்பி காமராஜ், எம்.எல்.ஏ.கள் கெங்கவல்லி மருதமுத்து ஆத்தூர் சின்னதம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 730 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். திமிறிய காளைகளை ஆர்வத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் கட்டில் பீரோ, சைக்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, தம்மப்பட்டி, கெங்கவல்லி, வாழப்பாடி, உலிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version