நாட்டு இன காளைகளை காப்பாற்றும் விதமாக சேலத்தில் விரைவில் கால்நடை பூங்கா அமைக்கப்படவுள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விலையில்லா நாட்டுக்கோழி, கறவை பசுக்கள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார்.
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழி மற்றும் கறவை பசுக்களை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், நாட்டு இன காளைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சேலம் மாவட்டத்தில் 1600 ஏக்கர் நிலப்பரப்பில் கால்நடை பூங்கா தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
அனைத்து கால்நடை மருந்தகங்களையும் கணினி மூலம் இணைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.