அந்தியூர் கால்நடைச் சந்தையில் நாட்டு மாடுகளை, விவசாயிகள் நல்ல விலைக்கு வாங்கிச் செல்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள கால்நடை சந்தைக்கு சிந்தி, ஜெர்சி போன்ற கலப்பின மாடுகளும், காங்கயம் இன நாட்டு மாடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. தற்பொழுது அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்துள்ள மழை காரணமாக, கால்நடைக்குத் தேவையான தீவனம் கிடைக்கின்றது. இதன் காரணமாக விவசாயிகள், காங்கேயம் இன நாட்டுக் கன்றுகளை, ஜோடி 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிச் செல்கின்றனர். உள்ளூர் விவசாயிகள் மட்டுமின்றி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், கொள்ளேகால் பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகளும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.