சாய்னா நேவாலின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், பருப்பள்ளி காஷ்யப் ஆகியோரின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால், ஹைதராபாத்தை சேர்ந்த சக பேட்மிண்டன் வீரரான பருப்பள்ளி காஷ்யப்பை கடந்த 14-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. இந்த புகைப்படங்களை வைரலாகி வரும் நிலையில், மணமக்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version