சென்னை – ரஷ்யா இடையேயான கடல்வழி போக்குவரத்து பாதை அமைக்கும் பணிகள் முனைப்புடன் நடைபெற்று வருகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளின் உதவியில்லாமல் ரஷ்யாவுக்கு கப்பல் போக்குவரத்துக்கான புதிய நீர்வழிப்பாதையை அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக இந்தியா – ரஷ்யா இடையே கடந்த 2019 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி, சென்னையில் இருந்து மலேசியா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா வழியாக ரஷ்யாவின் விளாடிவோஸ்டேக் (vladivostok) செல்லும் வகையில் பாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆய்வு செய்யும் பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் கடந்த மாதம் கோரப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது.
இதையடுத்து, வல்லுநர்கள் உதவியுடன் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
சூயஸ் கால்வாய் வழியாக ரஷ்யா செல்ல 8 ஆயிரத்து 675 நாட்டிகல் மைல் தொலைவில் 40 மணி நேரம் ஆகும் என்ற நிலையில் பயண தொலைவை குறைப்பதற்காக, சென்னையில் இருந்து 24 மணி நேரத்தில் ரஷ்யா செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட உள்ளது.
ரஷ்யாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளை தவிர்த்து நேரடியாக இந்தியாவுக்கு எண்ணெய் இறக்குமதி செய்ய இந்த பாதை பேருதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.