ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகுப் போட்டி

நெல்லை மாவட்டம் கூட்டப்புளி புனித சூசையப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகுப் போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

கூடங்குளத்தை அடுத்துள்ள கூட்டப்புளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது.  இங்கு ஒவ்வொரு வருடமும், ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு 163 வது ஆண்டு விழா கடந்த இரண்டு தினங்களாக தொடங்கி நடந்து வருகிறது.

திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடத்தப்பட்டது. இதற்காக கூட்டப்புளி கடற்கரையிலிருந்து போட்டிகள் தொடங்கியது, போட்டியை ஆலய பங்குத்தந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் .

இந்த போட்டியில் 11 பாய்மரப்படகுகள் கலந்துகொண்டன. கூட்டப்புளி கடற்கரையில் தொடங்கி தோமையார்புரம் வரை சென்று மீண்டும் படகுகள் கூட்டப்புளி கடற்கரையை அடைந்தன. இதில் முதலாவது வந்த படகிற்கு ஒரு லட்ச ரூபாயும், இரண்டாவது இடத்தை பிடித்த படகிற்கு 50 ஆயிரம் ரூபாயும் மூன்றாவதாக வந்த படகிற்கு 25 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. கடற்கரையில் திரண்ட ஏராளமான பொதுமக்கள் படகுப்போட்டியை கூடி நின்று கண்டு ரசித்தனர்.

Exit mobile version