தர்ம முனீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற பாய்மர படகு போட்டி

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் தர்ம முனீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி பாய்மர படகு போட்டி நடைபெற்றது.

படகுக்கு தலா 5 பேர் வீதம் 33 படகுகளில் 165 பேர் போட்டியில் பங்கேற்றனர். சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக பத்தாயிரம் ரூபாயும் ஆறுதல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பாய்மர படகுப் போட்டியினை கண்டு ரசித்தனர்.

Exit mobile version