கடல் சீற்றம் காரணமாக கரை ஒதுங்கிய அதிநவீன படகு

கடல் சீற்றம் காரணமாக கரை ஒதுங்கிய, அதி நவீன படகை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ராணுவத்திற்கு சொந்தமான அதி நவீன படகு ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. தரையிலும், தண்ணீரிலும் செல்லக்கூடிய இந்த அதி நவீன படகானது, கடல் சீற்றம் காரணமாக மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே கரை ஒதுங்கியது. தொடர்ந்து கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால், படகு நிறுத்தி வைக்கப்பட்டது. படகில் 15 கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் இருந்த நிலையில், படகினைச் சுற்றிலும் பாதுகாப்பு படையினர் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டனர். பிறகு கடல் சீற்றம் குறைந்த பின் சென்னை நோக்கி சென்றது. தரையிலும், தண்ணீரிலும் செல்லக்கூடிய இந்த அதி நவீன படகை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தன

Exit mobile version