சாய்பாபா கோயிலுக்கு உதவுவதாகக்கூறி தங்கசங்கிலி திருட்டு

சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோயிலின் பெயரை சொல்லி, தங்கச்சங்கலியை திருடிய மர்ம ஆசாமியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த மாதம், சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோயில் சென்று, தான் இக்கோயிலுக்கு பல்வேறு உதவிகள் செய்ய வந்ததாகக்கூறி, கார்த்திக் என்பவர் அப்பகுதியினரிடம் தெரிவித்திருக்கிறார். மேலும் தான் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதால்,சாய்பாபா கோயிலுக்குத் தேவையான பல்வேறு பொருட்களை வாங்க, தியாகராயநகருக்குச் செல்ல வேண்டுமென்றும் கேட்டிருக்கிறார். இதை உண்மை என நம்பிய கோபி, இருசக்கரவாகனத்தில் கார்த்திக்கை தியாகராயநகருக்கு அழைத்துச்சென்றிருக்கிறார். இதையடுத்து,தனது மனைவிக்கு நகை வாங்கவேண்டுமெனெக்கூறிய கார்த்திக், கோபி அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பெற்று செல்ஃபி எடுத்திருக்கிறார். அப்போது, கோபியை இருசக்கரவாகனத்தை நிறுத்திவிட்டு வாருங்கள் என வற்புறுத்திய கார்த்திக்,அவர் பார்க்கிங் பகுதிக்குசென்றவுடன் நைஸாக நழுவினார். இதனால் 4.5 சவரன் தங்கச்சங்கிலியை பறிகொடுத்த கோபி, காவல்துறையில் கொடுத்த புகாரின்பேரில் காவல்துறையினர் தற்போது கார்த்திக்கை கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரிடமிருந்து பல்வேறு திருட்டுசம்பவங்களில் பிடிபட்ட 20-க்கும் மேற்பட்ட சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன

Exit mobile version