சாய்பாபாவுக்கு வித்தியாசமான முறையில் கொரோனா அலங்காரம்

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வீசி வரும் நிலையில் மூன்றாவது அலை உருவாகாமல் இருக்க மருத்துவ ரீதியாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், பொது மக்களும் அவர்களால் முடிந்த அளவு பாதுகாப்பாக இருக்கவும், அவரவர்களுக்கு பிடித்த கடவுளுக்கு பிராத்தனை செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்

அவற்றில் ஒன்றாக தற்போது சாய்பாபாவுக்கு கொரோனா அலங்காரம் செய்யப்பட்டு இரண்டாம் அலையிலிருந்து அனைவரும் மீண்டும் வரவும், மூன்றாம் அலை பரவாமல் இருக்கவும் பிராத்தனை செய்து வருகின்றனர்

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடும் பெங்களூர் ஜேபி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில்,

இந்தியாவில் மூன்றாவது அலை உருவாகாமல் இருக்கவும் இரண்டாவது அலை கூடிய விரைவில் முடிவுக்கு வரவேண்டியும், சாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்கள், இரண்டாயிரம் சானிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை கொண்டு வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன

இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இந்தியாவில் மூன்றாவது அலை வரக்கூடாது என வேண்டி வழிபட்டனர்.

Exit mobile version