சாகர் கவாச் என்னும் ஆம்லா கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

தூத்துக்குடியில் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்கும் வகையில் சாகர் கவாச் என்னும் ஆம்லா கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் அன்னியர்கள், தீவிரவாதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்கும் வகையில், கடல் பகுதியில் சாகர் கவாச் எனும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு
படையினர், டிஎஸ்பி ராஜ் தலைமையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடலோர பகுதிகளான வேம்பார் முதல்   கூடன்குளம் வரை ஒத்திகை மேற்கொண்டனர். முயல் தீவு, பழைய துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, பழைய துறைமுகப்பகுதியில் இருந்து, முயல்தீவு பகுதிக்கு வந்த 2 மர்மப் படகை சோதனையிட்டனர். அதில் தீவிரவாதிகள் போல் இருந்த கடலோர காவல்படையைச் சேர்ந்த 12 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து போலி வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். இதில் இந்திய கடலோர காவல்படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, தமிழக கமாண்டோ காவல்படை, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் இணைந்து ஒத்திகை மேற்கொண்டனர்.

Exit mobile version