வங்கக் கடலில் உருவான புல்புல் புயல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவு அருகே கரையை கடந்தது.
வங்கக் கடலில் உருவான புல்புல் புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து அதிதீவிர புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து, ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
புல்புல் புயல் மேற்கு வங்கத்தில் கரைகடக்கும் என எதிர்பார்க்கப்பட்டதால், கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் வலுவிழந்த புல்புல் புயல் மேற்கு வங்க மாநிலம் சகர் தீவு அருகே புயல் கரையை கடந்தது. அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.