பொங்கல் தொகுப்பில் மட்டமான பொருட்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில், குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஊழல் முறைகேட்டில் அமைச்சர்களை காப்பாற்ற, அரசு அதிகாரி பலிகடா ஆக்கப்பட்டாரா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி திமுக அரசு விநியோகம் செய்த பொங்கல் தொகுப்பில் மட்டமான பொருட்கள் வழங்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததை, அண்ணா திமுக ஆதாரபூர்வமாக முறைகேட்டை பொது வெளி கொண்டு வந்தது.
இந்த நிலையில், பொங்கல் தொகுப்பு பொருட்கள் கொள்முதலில் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்டதாக கூறி, குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தர கட்டுப்பாட்டு மேலாளரை அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.
தொகுப்பு கொள்முதலில் நேரடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரையோ, பொருட்கள் விநியோகம் செய்த நிறுவனங்கள் மீதோ எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு யாரைக் காப்பாற்ற அதிகாரி மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.