இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், கொரோனா தொற்று உறுதியானதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்தில் வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது, பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.