கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய சச்சின்: ஆதரவற்ற குழந்தைகளுடன் நடனம் ஆடி கொண்டாட்டம்

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ஆதரவற்ற குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து அஷ்ராய் என்ற ஆதரவற்ற குழந்தைகள் நல மையத்திற்கு சென்றார். அங்குள்ள குழந்தைகள் சச்சினை கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் கண்டதும் மகிழ்ச்சியில் கைதட்டி மகிழ்ந்தனர்.

பின்னர், சச்சின் கிரிக்கெட் விளையாடி குழந்தைகளை உற்சாகப்படுத்தினார். சிறுவர், சிறுமியர்களுடன் சேர்ந்து நடனமாடியும் குழந்தைகளை சச்சின் மகிழ்வித்தார். இதையடுத்து அனைவருக்கும் ஏராளமான பரிசுகளை வழங்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version