கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தனது மனதை மிகவும் பாதித்தாக கிரிக்கெட் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட நினைக்கும் பலருக்கும் இன்றைக்கும் ரோல் மாடலாக திகழ்பவர் சச்சின் டெண்டுல்கர். பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்காக போராடிய அவரை கிரிக்கெட் பார்க்கும் எந்த நாட்டினராலும் மறக்க முடியாது.
Start your 2020 with the inspirational video of this kid Madda Ram playing cricket ? with his friends.
It warmed my heart and I am sure it will warm yours too. pic.twitter.com/Wgwh1kLegS— Sachin Tendulkar (@sachin_rt) January 1, 2020
புத்தாண்டை முன்னிட்டு சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவர் கிரிக்கெட் விளையாடுகிறான். அவன் ஒருமுனையில் இருந்து மறுமுனைக்கு கைகளை ஊன்றி தாவி தாவி ஓடுகிறான்.
இதுகுறித்து சச்சின் வெளியிட்ட பதிவில், “2020ம் ஆண்டை உத்வேகம் தரும் இந்த வீடியோவுடன் தொடங்குங்கள்.இது என் மனதை பாதித்தது. உங்களையும் பாதிக்கும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
ஊனம் என்பதை தடையில்லை என்பதை அனைவருக்கும் உணர்த்திய இச்சிறுவனின் வீடியோவை நாமும் முன்னுதாரணமாக கொண்டு இந்த ஆண்டை தொடங்குவோம்..