சபரிமலையில் குவிந்து வரும் மக்கள் கூட்டத்தால் அய்யப்பன் கோவிலில் ஒரே நாளில் மூன்றரை கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை கடந்த 16ம் தேதி அன்று திறக்கப்பட்ட மறுநாள் முதல் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 2 நாட்களில் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் மட்டும் மூன்றரை கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் இது கடந்த ஆண்டை விட ஒன்றரை கோடி ரூபாய் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் வருமானமும் உயர்ந்துள்ளதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.