சபரிமலை வழக்கில் 22ம் தேதி விசாரணை இல்லை – உச்ச நீதிமன்றம்

சபரிமலை விவகாரம் தொடர்பான மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை வரும் 22ம் தேதி நடைபெறாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்த அனுமதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், உச்ச நீதிமன்றத்திலும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இம்மாதம் 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீதிபதி இந்து மல்ஹோத்ரா விடுப்பில் இருப்பதால் சபரிமலை விவகாரம் தொடர்பான மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை 22ம் தேதி நடைபெறாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Exit mobile version