சபரிமலை விவகாரத்தால் கேரள சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டதால், 3 வது நாளாக அவை ஒத்தி வைக்கப்பட்டது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சன்னிதானத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விவகாரம் கேரள சட்டப்பேரவையிலும் எதிரொலித்து வருகிறது.
சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் அவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 3 வது நாளாக இன்றும் கேரள சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்தி வைக்கப்பட்டது.