புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை செப்.16 ல் திறப்பு

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட இருக்கும் நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதால் பக்தர்கள் சாமி தரிசனம் அனுமதிக்கப்படுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 15 ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற புத்தரிசி பூஜை மற்றும் திருவோண சிறப்பு பூஜையில், தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நிறைவு நாளில், படி பூஜை, புஷ்பாபிஷேகத்துடன் கடந்த 23ம் தேதி நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து புரட்டாசி மாத பூஜைக்காக கோயில் நடை வருகிற 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் 21ம் தேதி இரவு நடை அடைக்கப்பட உள்ளது. இந்நிலையில் கேராளவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நிபா வைரஸால் 250க்கும் மேற்பட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நடை திறக்கப்பட்டாலும், பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version