சபரிமலை தீர்ப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்களை ஜனவரி 30ம் தேதிக்கு முன்பு விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக பல்வேறு சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணையை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க நீதிபதிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
எனினும், நீதிபதி ஹிந்து மல்ஹோத்ரா, ஜனவரி 30ம் தேதி வரை மருத்துவ விடுப்பில் உள்ளதால், சபரிமலை தொடர்பான மனுக்களை அவசரமாக விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குறிப்பிட்டார். ஹிந்து மல்ஹோத்ரா பணிக்கு திரும்பிய பின்னரே விசாரணை தேதி முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.