சபரிமலை அய்யப்பன் கோயிலின் நடை இன்று சாத்தப்படுகிறது

மகரவிளக்கு, மண்டல பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோயிலின் நடை இன்று சாத்தப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோயில், மகரவிளக்கு மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பெண்கள், சபரிமலைக்கு செல்ல முயன்றதால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. தொடர் போராட்டங்கள் காரணமாக, இந்தாண்டு குறைந்த அளவிலான பக்தர்களே சுவாமி தரிசனம் செய்தனர்.

இதன் காரணமாக, இந்த சீசனில் 98 கோடி ரூபாய் வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக திருவாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர் கே.பி. சங்கரதாஸ் கூறியுள்ளார்.இந்நிலையில், மாளிகப்புரத்தன் கோயிலில் குருதி நிகழ்ச்சி நேற்று இரவு நடத்தப்பட்டது. இன்று காலை பந்தளம் ராஜ குடும்பத்தினர் சிறப்பு தரிசனம் செய்த பின்னர், கோயிலில் நடை சாத்தப்படுகிறது. மாச மாத பூஜைக்காக பிப்ரவரி 12ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும்.

Exit mobile version