அதிமுக தொண்டர்கள் உடன் எஸ் பி வேலுமணி ஆலோசனை

கோவை சூலூரில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டார்.

கோவை சூலூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக தொண்டர்கள் உடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கட்சி தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர். 50 ஆண்டுகால வளர்ச்சியை அதிமுக அரசு 8 ஆண்டுகளில் வழங்கியுள்ளதாக அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறினார். கோவையின் பல்வேறு பகுதிகளில் பாலங்கள் சாலைகள் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் அதிமுக அரசு மேற்கொண்டு வருவதை சுட்டிக் காட்டிய அவர், தொண்டர்கள் சிறப்பான களப்பணியாற்றி, சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமியை வெற்றி பெற செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Exit mobile version